மை மர்லன் அண்ட் பிராண்டோ (திரைப்பார்வை - IFFK 08)
”பயணம் செய்யப் பிடிக்குமா?”
இந்தக் கேள்விக்கு பெரும்பாலானோர் ‘ஆம்’ எனலாம். அவர்களிடமே,
“போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாட்டு எல்லையைக் கடந்து, அதுவும் திருட்டுத்தனமாகக் கடந்து பயணம் செய்ய விரும்புவீர்களா!?”
எனக் கேட்டுப் பாருங்கள். ‘இல்லை’ என்பதுதான் உடனடி பதிலாக இருக்கும்.
கேரளத் திரைப்படத் திருவிழா 2008
கேரள சர்வதேசத் திரைப்படத் திருவிழா கடந்த வெள்ளியன்று (12 டிசம்பர் 08) ஆரம்பித்து திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகின்றது. கேரள சாலசித்ர அகாடமியினால் நடத்தப்படும் இவ்விழாவில், பன்னாட்டுத் திரைப்படங்களுடன், மலையாளம் மற்றும் மற்ற இந்திய மொழித் திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன. திருவனந்தபுரம் தம்பானூர் பகுதியைச் சுற்றி இருக்கும் ஏழு திரையரங்குகளில் ஒரு நாளைக்கு 5 காட்சிகள் என ஏற்பாடு செய்துள்ளனர்.